puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 அக்டோபர், 2013

நெருங்கியது புயல்; ஸ்தம்பித்தது ஒடிசா

அந்தமான் நிக்கோபார் தீவு அருகே உருவான பாய்லின் புயல் சின்னம் நகர்ந்து தற்போது ஆந்திர மாநிலம் கலிங்கப்ப்பட்டனம் மற்றும் ஒடிசா மாநிலம் பிரதீப் மற்றும கன்ஜம் மாவட்டத்தில்  உள்ள கோபால்பூர் அருகே 40கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது.  புயல்  தற்போது நெருங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23 ஆண்டுகளில் ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பை விட அதிகமாகவே பாய்லினால் பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 ஒடிசா மற்றும் ஆந்திராவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிககைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதியில் இருந்த 5 லட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்திப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் ஏராளமானோர் ஒடிசா ஆந்திர எல்லைப்பகுதி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
.தற்போது புயல் தாக்கம் அதிகாமாவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..புயல் காரணமாக  ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மரம் மற்றும் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்துவருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மேலும் புயல் தாக்கத்தால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புவனேஸ்வர் மற்றும் கன்ஜம் மாவட்டங்களில் மரம் முறிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
பாய்லின் புயல் எந்த நேரமும் கோபால்பூரில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 220 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..  13 மாவட்டங்களை புயல் கடுமையாக தாக்கும் என்பால் ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம் விஜயகநகரம் மற்றும் ஒடிசாவின் கன்ஜம்பூர், பேராம்பூர் பிரதீப் மற்றும கோபால்பூர் உள்ளளிட்ட பகுதிகளில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன



dinamani thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக