puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 10 அக்டோபர், 2013

ஆதார் கட்டாயமில்லை! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

ஆதார் கட்டாயமில்லை! – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

aad
புதுடெல்லி: சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெற ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணத்தை வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

“இந்த விவகாரத்தில் கடந்த மாதம் 23-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் எந்த மாற்றமும் தற்போதைய நிலையில் செய்ய முடியாது. அதே சமயம், உத்தரவில் மாற்றம் கோரி மத்திய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், அருணா ராய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் விரைவில் விசாரிக்கப்படும்” என நீதிமன்றம் கூறியது.
திருமணம், வருங்கால வைப்பு நிதி, சொத்துப் பதிவு போன்றவற்றைப் பதிவு செய்ய ஆதார் எண் அடங்கிய அடையாள ஆவணம் அவசியம் என்று சில மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. இதேபோல, அரசின் மானியத் திட்டங்களைப் பெறவும் ஆதார் ஆவணம் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். புட்டஸ்வாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் “நலத் திட்டங்களைப் பெற ஆதார் எண் அடங்கிய ஆவணம் அவசியம் இல்லை” என்று கடந்த மாதம் 25-ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாக்கல் செய்த மனுவில், “ஆதார் ஆவணம் தொடர்பான உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், எஸ்.ஏ. பாப்டே அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குலாம் இ. வாகனவதி முன்வைத்த வாதம்:
“நீதிமன்ற உத்தரவால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். ஆதார் எண் ஆவணத்தை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் ரூ. 40 ஆயிரம் கோடியை சமையல் எரிவாயு மானியத்துக்காக மத்திய அரசு ஒதுக்குகிறது. ஆதார் எண் ஆவணத்தை வைத்திருப்போருக்குத்தான் எரிவாயு இணைப்புக் கிடைக்கும் என்ற நிலை உருவானால், ஓரளவுக்கு போலிகள், உரிய ஆவணம் இல்லாதவர்கள் அத்தகைய வசதியைப் பெற்றிருக்கும் நிலை தடுக்கப்படும்.
பொதுவாக, குடும்ப அட்டை, தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் அட்டையைக் கூட சிலர் போலியாகத் தயாரித்து மோசடி செய்கின்றனர். ஆனால், ஆதார் எண் ஆவணம் மிகவும் நம்பகத்தனமானது. போலியாகத் தயாரிக்க முடியாதது. அனைத்து அரசின் திட்டங்களையும் அந்த எண்ணைக் கொண்டு அறிய முடியும்.
இப்போதும் கூட ஆதார் எண்ணைக் குடிமக்கள் வைதிருக்க வேண்டியது அவசியம் இல்லை என்றே அரசு கூறுகிறது. ஆனால், மானியத் திட்டங்களைப் பெற அந்த ஆவணம் தேவை என்று வலியுறுத்துகிறது. இது தொடர்பாக சில ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருவதால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற வேண்டும்” என்று அட்டர்னி ஜெனரல் வாகனவதி வாதிட்டார்.
அதைக் கேட்ட நீதிபதிகள் கூறியது:
“ஆதார் எண் ஆவணத்தை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கி முடிப்பதற்கு பல காலம் ஆகும் என்பதை மத்திய அரசே ஒப்புக் கொள்கிறது. பெரும்பான்மை மக்களுக்கு அந்த எண் ஒதுக்கப்படாத நிலையில், திட்டத்தின் பலன்களைப் பெற ஆதார் எண் வைத்திருக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் தற்போதைய நிலையில், எந்த மாற்றமும் செய்ய முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களும் சில ஆர்வலர்களும் தாக்கல் செய்துள்ள மனுக்களை விரைவில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.


thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக