puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

சனி, 12 அக்டோபர், 2013

கல்லூரி முதல்வரை கொன்றது ஏன்? மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

 ஒக்ரோபர் 2013
எங்களை கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்ததால் கல்லூரி முதல்வரை வெட்டிக் கொலை செய்தோம் என்று மாணவர்கள் மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நெல்லை அருகே கீழவல்லநாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முதல்வரை 3 மாணவர்கள் நேற்று வெட்டிக் கொலை செய்தனர்.
இது தொடர்பாக மூன்று பேரையும் பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர்கள் வாக்குமூலம் ஒன்றினை அளித்துள்ளனர்.
அதில், நாங்கள் மூன்று பேரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்தோம்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கல்லூரி பேருந்தில் வந்த சில மாணவிகளை கிண்டல் செய்ததால் சில மாணவர்கள் எங்களை கண்டித்தனர், இதனால் அவர்களுடன் கைகலப்பு ஏற்பட்டது.
இது சம்மந்தமாக கல்லூரி முதல்வர் சுரேஷ் எங்கள் மூவரையும் கண்டித்தார். இதற்கு காரணமான மாணவர்களுடன் கல்லூரி வளாகத்தில் மீண்டும் தகராறு செய்தோம்.
இதையடுத்து பிச்சை கண்ணனை, முதல்வர் கடந்த வாரம் கல்லூரியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்தார். இரு நாட்களுக்கு முன்பு பிச்சைகண்ணன் உட்பட நாங்கள் மூன்று பேரும் முதல்வரை சந்தித்து அதனை ரத்து செய்யும்படி வலியுறுத்தினோம்.
ஆனால் அவர் கண்டிப்புடன் பேசியதுடன், பிச்சை கண்ணனுக்கு ஆதரவாக செயல்பட்டால் எங்களையும் நீக்கம் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். இதற்காக பாளை மார்க்கெட்டில் உள்ள ஒரு கடையில் அரிவாள், கத்தியை வாங்கினோம்.
பின்பு கல்லூரிக்கு காரில் வந்து இறங்கிய முதல்வரை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தோம் என்று பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.


newindianews. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக