October 3, 2013 08:49 am
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் சண்டையை அடுத்து, அமெரிக்க அரசுத் துறை அலுவலகங்கள் பல மூடப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்தப் பிரச்சினையை சமாளிப்பதற்காக, அடுத்த வராம் மேற்கொள்ளவிருந்த தனது மலேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் விஜயத்தை ரத்து செய்திருக்கிறார்
.
.
இந்த விஜயத்தின் தொடர்ச்சியாக இந்தோனேசியா மற்றும் புருனெய் ஆகிய நாடுகளுக்கும் செல்லவிருந்த ஒபாமா,அந்தப் பயணங்களையும் மேற்கொள்ளவேண்டுமா என்பது குறித்து இன்னும் பரிசீலித்துக் கொண்டிருக்கிறார் என்று அவருக்காகப் பேசவல்ல ஒரு அதிகாரி கூறினார்.
17 ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடப்படும் இந்த முதல் சம்பவம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், வரவு செலவுத் திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டுக்கு வரமுடியாததால் நடந்திருக்கிறது.
பல அரசு நிறுவனங்கள் மூடப்பட்டதை அடுத்து லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக