மகாராஷ்டிர மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவரை அவரது பெற்றோர் மொபைல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்தியதற்காக கண்டித்ததால் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் பர்பானி என்ற இடத்தில் சுனில் தஹிவால் என்பவர் தனது மனைவி,மகள் ஐஸ்வர்யா மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகின்றார்.
இவர்களில் 17 வயதாகும் மகள் ஐஸ்வர்யா கல்லூரியில் படித்து வந்தார். இவர் அதிக நேரம் மொபைல் மற்றும் பேஸ்புக் பயன்படுத்துவதை கண்டு கவலை அடைந்த அவரது பெற்றோர் இத்தகைய வலைத்தளங்களையும், மொபைல் போனையும் வைத்துக்கொண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பழக்கத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார்கள்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவும் ஐஸ்வர்யா பேஸ்புக்கில் நிறைய நேரம் செலவழிப்பதை கண்ட பெற்றோர் ஐஸ்வர்யா கண்டித்தனர்.
இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா தனது அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு,தன்னுடைய பெற்றோர் தன்னை இதுபோல் அடிக்கடி தடுப்பதாகவும், இத்தனை கட்டுப்பாடுகளுடன் தன்னால் இருக்கமுடியாது என்றும் பேஸ்புக் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்றும் கடிதத்தில் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
ஐஸ்வர்யாவின் குடும்பமே அவரது தற்கொலையால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
thamilan THANKS
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக