puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 28 அக்டோபர், 2013

மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை: தனியார் பள்ளிகள் உத்தரவு


மாணவர்கள் பேஸ்புக்கில்
கையடக்க தொலைபேசி பிரபலமானது போல் இப்போது இணைய தள பேஸ்புக்கும் வேகமாக பரவியுள்ளது. குறிப்பாக மாணவ—மாணவிகள், இளைஞர்களும், இளம்பெண்கள் ஏராளமானோர் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கி ஒருவருக்கொருவர் நட்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள். 

ஆனால் சமீபகாலமாக சிலர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் கணக்கு தொடங்கியும், வேறொருவர் போட்டோக்களை போட்டு மோசடியில் ஈடுபடும் செயல் அதிகரித்துள்ளது. 

இது ஒரு புறம் இருக்க மாணவர்களின் கல்வியையும் பாதிக்கிறது. பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் முன்பெல்லாம் விளையாட்டில் கவனம் செலுத்துவார்கள். பின்னர் வீட்டுப்பாடம் படிப்பார்கள். 

ஆனால் இப்போது வீடு திரும்பும் மாணவர்கள் பேஸ்புக்கில் மூழ்கி விடுகிறார்கள். இதனால் சோர்வு ஏற்பட்டு வீட்டு பாடத்தை கோட்டைவிட்டு மறுநாள் பள்ளி செல்லும் போது ஆசிரியர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். 

இதையடுத்து பெங்களூரில் உள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்கள் பேஸ்புக்கில் கணக்கு தொடங்க தடை விதித்துள்ளது. 

உடனடியாக மாணவர்கள் அனைவரும் தங்களது பேஸ்புக் கணக்குகளை அழித்து விடுமாறு உத்தர விடப்பட்டுள்ளது. 

இதுபற்றி பள்ளி முதல்வர் ஒருவர் கூறுகையில், ‘‘வீடு செல்லும் மாணவர்கள் பேஸ் புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் களைப்பு அடைந்து வருகிறார்கள். 

பெற்றோர்களும் அவர்களை கண்டுகொள்வதில்லை. நீண்ட நேரம் பேஸ்புக்கில் இருப்பதால் மறுநாள் பள்ளிக்கு வரும் போது சோர்வுடன் காணப்படுகிறார்கள். எனவே தான் நாங்கள் இவ்வாறு தடை விதித்து இருக்கிறோம்’’ என்றார். 

இது மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நாங்கள் பேஸ்புக்கில் கவனம் செலுத்துவது இல்லை. இப்போது தடை விதித்து இருப்பதால் எங்களுக்கு பேஸ்புக் மீது ஆர்வத்தை தூண்டச் செய்கிறது என்று மாணவரான ஜோசப் கூறினார்.


viyapu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக