மனித சமூகம் தியாகத்தை நினைவு கூறும் உன்னத நாளாக தியாக திருநாள் என்றும் ஹஜ்ஜு பெருநாள் என்றும் அழைக்கப்படும் ஈதுல் அள்கா விளங்குகிறது.
தியாகத்தின் மேன்மையை பறை சாற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் அனைத்து நலன்களும் பெற்று நல்வாழ்வு பெற வாழ்த்துகிறேன்.
முஷாபர் நகர் பகுதியில் இன்றுவரை லட்சத்திற்கு மேற்பட்ட சிறுபான்மை மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிவாரண முகாம்களில் வாடும் அவல நிலை , சர்வதேச சந்தையில் இந்திய நாணய மதிப்பின் வீழ்ச்சி , விலைவாசி ஏற்றம் , பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரிப்பு, மது விலக்கு ஒழிக்கப்படாதது உள்ளிட்டவை நம் மனதை வருத்தி வருகின்றன. இது போன்ற துயர நிகழ்வுகளை, தீமைகளை முறியடித்து மக்கள் நலம் பேண நாட்டுமக்கள் ஒவ்வொருவரும் உறுதி பூணவேண்டும்
இந்திய திருநாட்டில் ஒற்றுமை பேணி வாழும் மக்களின், மத்தியில் சண்டை , பிளவு , பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்த மத வாத பாசிச சக்திகள் முயன்று வருகின்றன. அதனை நாம் ஒன்றுபட்டு முறியடிக்க இந்த தியாக திருநாளில் சபதம் ஏற்போம்
ஜே எஸ் ரிபாயி
தலைவர் த மு மு க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக