ஹைதராபாத்: இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை சனிக்கிழமை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பைலின் என்று அழைக்கப்படும் பெரும் புயலை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராகி வருகிறார்கள்.
ஒடிஷா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை பைலின் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
இந்தப் புயலின்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களும், சுற்றுலாப் பயணிகளும், கடலுக்கு அருகே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவப் படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 1999ல் ஒடிஷாவைத் தாக்கிய பெரிய புயல் ஒன்றில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த முறை தாங்கள் மேலதிகத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக