மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி!
28 Oct 2013
பாட்னா: இந்தியாவின் பீகார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திர மோடியின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள். வெடிக்காத பல குண்டுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியும், இந்து தேசியவாத கட்சியுமான பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடியின் உரையைக் கேட்பதற்காக நகர மையத்தில் பா.ஜ.க. ஆதரவாளர்கள் கூடியிருந்தபோது இந்த குண்டுகள் வெடித்துள்ளன.
பீகாரில் நிகழ்ந்தது தீவிரவாத தாக்குதலா? அரசியல் சதியா? என்று கூற முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பை பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் கண்டித்துள்ளனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி மற்றும் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.) ஆகியன பீகாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக