!
October 3, 2013 10:03 am
2050ம் ஆண்டுக்குள் 160 கோடி மக்கள் தொகையுடன் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடிக்கும் என பிரான்ஸ் நாட்டின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
அதே சமயம் 130 கோடி மக்கள் தொகையுடன் சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கை அப்போது உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 970 கோடியாக உயரும் எனவும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
கடந்த 200 ஆண்டுகளில் உலக மக்கள்தொகை 7 மடங்கு அதிகரித்து தற்போது 710கோடியாக உள்ளது.
இதில் 130 கோடி பேர் சீனாவிலும், 120 கோடி பேர் இந்தியாவிலும் உள்ளனர். அதாவது,ஒட்டுமொத்த உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியா மற்றும் சீனாவில் பிறந்தவர்கள் என்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக