puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

வியாழன், 19 செப்டம்பர், 2013

வெங்காயம் உட்பட அத்தியாவசிய பண்டங்களின் விலையை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

வெங்காயம் உட்பட அத்தியாவசிய பண்டங்களின் விலையை குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை
சென்னை, செப்.20-

'விண்ணைத்தாண்டி வருவாயா?' என்ற சினிமா தலைப்பை தவறாக புரிந்துகொண்டு, விலைவாசி உயரத்துக்குச் சென்றுவிட்டது. இந்த விலைவாசி உயர்வினால் உடனடியாக பாதிப்படைவது, ஏழை, எளியவர்கள்தான். அன்றாடம் சாப்பிடும் உணவும் அவர்களுக்கு எட்டாக் கனி ஆகிவிடும் என்பதை உணர்ந்து, மலிவு விலை உணவகங்களை பிப்ரவரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது அனைத்து ரக மக்களின் ஆதரவை அமோகமாக அள்ளிச் சென்றது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மலிவு விலையில் காய்கறிகளை விற்கும் 31 பண்ணை பசுமைக் கடைகளை ஜூன் மாதம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். கடந்த 3 ஆண்டுகளில் இந்த கடைகள் மூலம் ரூ.4.30 கோடி மதிப்புள்ள ஆயிரத்து 540 டன் காய்கறிகள் விற்பனை ஆகியுள்ளன. இதில் பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் ஆகியவைதான் முக்கிய இடம் பிடிக்கின்றன.

ஏனென்றால், சமீபத்தில் வெங்காய விலை விண்ணுக்குச் சென்றுவிட்டது. இந்த விலையை கட்டுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை அறிவுப்பூர்வமானதாகும். தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் வெங்காயம் விளைகிறதோ அந்த இடங்களை கண்டறிந்து, வெங்காயம் விளைவிக்கும் விவசாயிகளை அரசு நேரடியாக தொடர்பு கொண்டு பேசியது. அந்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் வெங்காயத்துக்கு விலை நிர்ணயம் செய்து, அவற்றை அரசே வாங்கி வினியோகம் செய்ய வேண்டும் என்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவை நிறைவேற்ற, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளர் எம்.பி.நிர்மலா மற்றும் உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

வெங்காயத்தை அதிகமாக விளைவிக்கும் நெல்லை மாவட்டம் சுரண்டையில் இருந்து இதுவரை கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வந்தது அப்போது தெரிய வந்தது. எனவே அங்குள்ள விவசாயிகளிடம் பேசி, சுரண்டை வெங்காயத்தை தற்போது அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து அரசே பெற்றுக்கொள்கிறது.

இதுமட்டுமல்ல கிருஷ்ணகிரி, விழுப்புரம், திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் விளையும் தேங்காய், காலி பிளவர், குடை மிளகாய், கத்தரி, பீர்க்கை, புடலங்காய் போன்ற பந்தல் காய்கறிகள், கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பட்டர் பீன்ஸ், கொத்தமல்லி, கீரை வகைகள் போன்றவற்றை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக வாங்குகிறது.

இந்த காய்கறிகளுக்கு நல்ல விலை கொடுப்பது மட்டுமல்ல, மீண்டும் பயிரிடுவதற்காக கடனையும் வழங்குவதால் விவசாயிகள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். எனவே விளைச்சல்களை அவர்களே தரம் பிரித்து, நல்ல தரமான காய்கறிகளை மட்டும் அரசுக்கு விவசாயிகள் கொடுக்கின்றனர். இந்த வகையில் அரசுக்கு 927 விவசாயிகள் நேரடியாக காய்கறிகளை வழங்கி வருவதாக அதிகாரி ஒருவர் கூறினார். கடன் அளிப்பதற்காக ரூ.36 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல, மராட்டிய மாநிலம் லாசகான், ஆந்திராவில் உள்ள கர்னூல், கர்நாடகாவில் குல்பெர்கா போன்ற வெளிமாநில மார்கெட்டில் இருந்தும் வெங்காயத்தை தமிழக அரசு வாங்குகிறது. லாசகானில் இருந்து தினமும் நான்கு லோடு வெங்காயம் லாரிகளில் வருகிறது.

வெளிமார்கெட்டில் ஒரு கிலோ வெங்காயத்தை அரசு ரூ.58-க்கு வாங்குகிறது. ஆனாலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு அதை பண்ணை பசுமை கடைகள் மூலம் ரூ.40-க்கு அரசு விற்பனை செய்கிறது. இதில் ஏற்படும் நஷ்டத்தை நிலை நிறுத்தத் தொகை மூலம் அரசு சீராக்கிக் கொள்கிறது.

வெங்காயத்தின் விலை தமிழகத்தின் வெளிமார்கெட்டில் ரூ.60 என்றுள்ளது. ஆனால் வடமாநிலங்களில் ரூ.90 வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை கடைகளில் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பதால்தான் தமிழகத்தின் மற்ற கடைகளில் வெங்காயத்தின் விலை ஏற்றப்படவில்லை. இல்லாவிட்டால் இங்கும் வெங்காயம், ஏழை, நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் ஆறாத காயத்தை ஏற்படுத்திவிடும். வெங்காயத்தைத் தொடர்ந்து இந்த வகையில் புளியையும் அரசு ரூ.3 கோடிக்கு வாங்கியுள்ளது.

வெங்காயத்தை பதுக்கி வைத்து செயற்கையாக விலை ஏற்றும் வியாபாரிகளின் நடவடிக்கையை தடுப்பது குறித்து கேட்டபோது, "வெங்காயத்தை நீண்ட நாட்களாக பதுக்க முடியாது. இந்த வகையில் விலை ஏற்றத்தை கொண்டு வர நினைத்தால், மொத்த விற்பனை பண்டக சாலைகள் மூலம் அதை அரசே விற்பனை செய்து, அவர்களின் முயற்சியை முறியடிக்கவும் தயாராக இருக்கிறோம்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில், விலைவாசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளிலும் அரசு அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏழை, எளிய, நடுத்தர மக்களை எந்த விதத்திலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாதிக்கக் கூடாது என்பதற்காக வெளிச்சந்தையில் உள்ள விலை ஏற்ற இறக்கங்களை கண்காணிக்க, விலைவாசி கண்காணிப்பு தனிப்பிரிவு இயங்கி வருகிறது. உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையரின் அலுவலகத்தில் இந்தப் பிரிவு இயங்குகிறது.

அதுமட்டுமல்ல, அத்தியாவசிய பொருட்களின் வாராந்திர விலை விவரங்களை தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் (நிதி) ஆகியோர் ஆய்வு செய்து, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகின்றனர். மாநில அளவில் விலைவாசி விவரங்களைக் கண்காணிப்பதற்கு, உணவுத்துறை அமைச்சர் தலைமையில் விலைவாசி கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பல்வேறு துறையின் செயலாளர்கள், ஆணையாளர்கள் உள்ளனர். காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை, அறிவுரைகளை அரசுக்கு இந்த குழு வழங்கி வருகிறது.

மேலும், ரேஷன் பொருட்களை போலி அட்டைகள் மூலம் பெற்று வந்த நடவடிக்கைகளையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு ஒடுக்கியுள்ளது. 1.6.11 முதல் 31.8.13 வரை அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் இரண்டு லட்சம் போலி ரேஷன் அட்டைகள் ஒழிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒரு கோடியே 96 லட்சம் ரேஷன் அட்டைகள் நடைமுறையில் உள்ளன.



maalaimalar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக