மக்களுக்கு தரமான குடிநீர் வழங்குவது என்பது அரசின் கடமை. அதை விடுத்து மலிவு விலை குடிநீர் என்று அரசே தண்ணீரை விற்பனை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிருந்தா காரத் கூறியுள்ளார்.
மேலும் தமிழக அரசின் மலிவு விலை குடிநீர் குறித்து அவர் கருத்து கூறுகையில், "மக்களுக்கு 100 சதவிகிதம் தரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. தரமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதில் ஏற்படும் குளறுபடிகளை சரி செய்து அத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டுமே தவிர,
மற்றவர்களை விட நாங்கள் மலிவு விலையில் குடிநீர் வழங்குகிறோம் என்று அரசு இவ்விஷயத்தில் களம் இறங்கி இருப்பது என்பது, மக்கள் நலனுக்கு விரோதப் போக்கு. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் விற்பனை செய்யட்டும், ஒரு அரசு என்பது மக்களுக்கு 100 சதவிகிதம் தரமான குடிநீரை வழங்க வேண்டும் என்பது, அந்த அரசின் கடமையல்லவா? தமிழக அரசின் இத்திட்டத்தை கண்டிப்பாக ஏற்று கொள்ள முடியாது, இதை ஊக்குவிக்கவும் கூடாது." என்று கூறியுள்ளார்.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக