சென்னையில் கனமழை
சென்னையில் பகலில் வெயில் வாட்டியெடுத்த நிலையில் இரவில் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. இப்படி ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் அது மக்களுக்கு ஒரு விதத்தில் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பெரும் இடையூறாகவே இருந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழையானது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரமடைந்து வருவதன் காரணமாக ஒரு சில தினங்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில் புதன் கிழமை இரவு இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், சென்னையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த வசதியும் இல்லாமல் உள்ளது.
இதனால் சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இது ஒரு புறம் இருந்தாலும், மடிப்பாக்கம், வளசரவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் இதே நிலைதான்.
அதேபோல், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டதோடு, சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட நிரந்தர தீர்வு இல்லை.
தாழ்வான பகுதிகளில் தேங்கக் கூடிய மழை நீரானது விரைவில் வெளியேற கால்வாய்களில் நிலவும் அடைப்புகளை சீரமைக்க வேண்டும் என்பது சென்னை மக்களின் கோரிக்
கை
கை
puthiyathalaimurai.tv thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக