உத்திர பிரதேசத்தில் ஆம்லெட்டில் வெங்காயம் போடாததால் கடுப்பான ஒருவர் கடைக்காரரை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் இடா மாவட்டத்தில் உள்ள அலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் பூஜாரி. அவர் தனது நண்பர்கள் 4 பேருடன் ஒரு கடைக்கு சென்று ஆம்லெட் கேட்டுள்ளார்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆம்லெட்டில் வெங்காயம் இல்லாததால் அவர்கள் கடுப்பாகினர் இது குறித்து கடைக்காரர் தீபு கஷ்யப்பிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறுகையில், கடந்த சில வாரங்களாக வெங்காய விலை அதிகரித்துவிட்டது. அதனால் வெங்காயம் வாங்க என்னால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு கடுப்பான பூஜாரி தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தீபுவை சுட்டுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வெங்காயம் இல்லாததால் ரகளை செய்த 5 பேரும் கிரிமினல்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
puthiyaulakam thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக