பனைக்குளம், செப். 18–
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளம் உள்ளது. இங்கு ஹெலிகாப்டர், ஆள் இல்லாத விமானங்கள் நிறுத்தப்பட்டு இரவில் வானத்தில் சென்று பறந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
நேற்று மாலையில் ஹெலிகாப்டர் மூலம் பைலட் சோனி, உதவி பைலட் ரெட்டி ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வழுதூர், பனைக்குளம், தேவிபட்டிணம் ஆகிய பகுதிகளில் வானத்தில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேர்போகி கண்மாய் அருகே சென்றபோது ஹெலிகாப்டர் என்ஜினில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது. இதனால் உடனே அவரசம் அவசரமாக கண்மாய் அருகே ஹெலிகாப்டர் தரை இறக்கப்பட்டது. அதில் இருந்த 2 பைலட்டுகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தேவிபட்டிணம் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய என்ஜினீயர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக