புதுடெல்லி: இந்தியாவில் இவ்வாண்டு நடந்த வகுப்புக் கலவரங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு நிகழ்ந்த வகுப்புக் கலவரங்களில் 107 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 66 பேர் முஸ்லிம்கள். 41 பேர் இந்துக்கள். அண்மையில் உ.பி. மாநிலம் முஸஃபர்நகர் உள்பட கடந்த 9 மாதங்களில் 479 வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.
உ.பி.யில் அதிகபட்சமாக 62 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 42 பேர் முஸ்லிம்கள். மத ரீதியான மோதல்களில் 1697 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 703 பேர் முஸ்லிம்கள். இந்துக்கள் 794 பேர். இதில் 200 போலீசாரும் அடங்குவர்.
குஜராத்தில் இவ்வாண்டு 54 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலா 3 முஸ்லிம்கள், இந்துக்கள் உயிரிழந்துள்ளனர். மஹராஷ்ட்ரா மாநிலத்தில் நிகழ்ந்த 56 கலவரங்களில் 7 முஸ்லிம்களும், 3 இந்துக்களும் பலியாகியுள்ளனர்.
பீகாரில் 40 மத ரீதியான மோதல்களில் 4 முஸ்லிம்களும், 5 இந்துக்களும் பலியாகியுள்ளனர்.
thoothuonline thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக