பிரிட்டனில் 4 வயது மகனைக் கொன்று, இறந்த மகனின் சடலத்தோடு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வாழ்ந்ததாக கைது செய்யப்பட்ட பெண் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
பிரிட்டன் பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது பெண்மணி அமந்த குட்டன். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் குட்டன் வீட்டைச் சோதனையிட்டனர்.
அப்போது அவரது படுக்கை அறையிலிருந்து சுமார் நான்கரை வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த சிறுவனின் சடலம் குட்டனின் மகன் என்பதும், அவனது பெயர் ஹம்சா கான் என்பதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
போலீஸ் கைப்பற்றிய குழந்தையின் சடலத்தில் 6 மாதம் முதல் 1 வயது வரை எடை கொண்ட குழந்தைகள் அணியும் ஆடை உடுத்தப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையில், குழந்தை உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாடால் இறந்தது கண்டு பிடிக்கப்பட்டது. குழந்தைக்குரிய மருத்துவ வசதிகளையும் குட்டன் செய்து கொடுக்கவில்லை என்பது விசாரணையில் அம்பலமானது.
இறந்த ஹம்சாவின் உடலை அந்த அறையின் கட்டிலிலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வைத்து குட்டன் பாதுகாத்து வந்துள்ளார்.
மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான குட்டனின் அறையானது மிகவும் துர்நாற்றத்துடன் இருப்பதையும் விசாரணைக்குழு உறுதி செய்துள்ளது.
பிராட்போர்டு கிரவுன் நீதிமன்றத்தில் அமந்தா குட்டன் மீது விசாரணை நடந்து வருகிறது. ஆனால், தான் கொலை செய்யவில்லை என்று அமந்தா தரப்பில் மறுக்கப்படுகிறது.
ஆனால், குழந்தை இறந்த சிறிது நேரத்திலேயே குட்டன் பீட்சா ஆர்டர் செய்து சாப்பிட்டதும், தொடர்ந்து குழந்தைகளுக்கான நல உதவிகளை பெற்று வந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
அமந்தா குட்டனின் கணவர் அப்டாப் கான் அவரை விட்டு முன்னரே பிரிந்து சென்று வேறு எங்கோ வசித்து வருவது குறிப்பிடத்தக்கது
thamilan thanks
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக