puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 25 செப்டம்பர், 2013

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகளை காணவில்லை

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகளை காணவில்லை

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 20 குழந்தைகளை காணவில்லை

September 25, 2013  12:14 pm
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ‘வெஸ்ட் கேட் மால்‘ எனும் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை திடீரென சுமார் 16 தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.


இந்த கொடூரத் தாக்குதல் நேற்று வரை 4 நாட்கள் நீடித்தது. நேற்று மதியத்துடன் தீவிரவாதிகளில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதால் தாக்குதல் முடிவுக்கு வந்தது. 11 தீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர்.


அல்–சபாப் எனும் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. அவர்களது கொலை வெறிக்கு சுமார் 70 பேர் பலியாகி விட்டனர். 200–க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இத்தாக்குதலில் பெங்களூரைச் சேர்ந்த சுதர்சன் நாகராஜ் என்பவர் பலியானதாக இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் கென்யா தாக்குதலில் இறந்த இந்தியர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது வெஸ்ட்கேட் மாலில் இருந்தவர்களில் சுமார் 51 பேர் காணவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்களில் 20 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த சிறுவர்–சிறுமியர் ஆவார்கள்.


இதனால் நைரோபியில் வசிக்கும் குஜராத் மாநில மக்களிடம் பதற்றம் நீடிக்கிறது. அவர்கள் கண்ணீர் மல்க தங்கள் குழந்தைகளை தேடி வருகிறார்கள். குழந்தைகளை கண்டுபிடிக்க இந்திய வெளியுறவுத்துறையும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.


தாக்குதல் நடந்த வணிக வளாகத்தில் சனிக்கிழமை மதியம் சுமார் 500 குஜராத் இளைஞர்கள், இளம்பெண்கள் பங்கேற்ற சமையல் போட்டி நடந்தது. அந்த சமயத்தில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். இதனால் குஜராத்தை சேர்ந்தவர்களில் கணிசமானவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.


அமெரிக்க நாட்டு மக்களையே தீவிரவாதிகள் குறி வைத்து சுட்டுள்ளனர். இந்தியர்கள், இங்கிலாந்து நாட்டுக்காரர்களை தீவிரவாதிகள் அச்சுறுத்தி விட்டு விட்டதாக கூறப்படுகிறது.


தற்போது வெஸ்ட்கேட் வணிக வளாகம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.


தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கென்யா அரசு சார்பில் 3 நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என்று ஜனாதிபதி உருகென்யட்டா அறிவித்துள்ளார்.


thamilan thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக