தேசிய அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமர் ஆவதற்கு 37.7 சதவீத பேரும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு 17.6 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து டைம்ஸ் நவ்-சி.வோட்டர்-இந்தியா டி.வி. சார்பில் தேசிய அளவிலான தேர்தல் கருத்து கணிப்பு நடந்தது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து டைம்ஸ் நவ்-சி.வோட்டர்-இந்தியா டி.வி. சார்பில் தேசிய அளவிலான தேர்தல் கருத்து கணிப்பு நடந்தது.
இதில், தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் எந்த ஒரு கூட்டணிக்கும் மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், முக்கிய கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு மிக கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.
இருப்பினும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தத்தில் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. இந்த கூட்டணிக்கு 158 இடங்கள் வரை கிடைக்கலாம்.
மேலும், 131 தொகுதிகளில் வெற்றி பெற்று பா.ஜ.க தனிப்பெரும் கட்சி அந்தஸ்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணியில் இடம் பெற்றுள்ள சிவசேனாவுக்கு 15 இடங்களும், அகாலிதளத்துக்கு 7ம், இந்திய குடியரசு கட்சிக்கு (அதாவ்லே) 2 இடங்களும், தேசியவாத மக்கள் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கலாம்.
10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 136 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் காங்கிரசுக்கு 119 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 5 இடங்களும், ராஷ்டிரீய லோக்தளம் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு தலா 3 இடங்களும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தேசிய மாநாட்டு கட்சிக்கு தலா 2 இடங்களும், கேரளா காங்கிரஸ் (மணி பிரிவு) ஒரு இடங்களும் கிடைக்கலாம்.
இந்த தேர்தலில், முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகியோர் தலைமையிலான மாநில கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சமாஜ்வாடி கட்சி அல்லது அ.தி.மு.க. தலைமையில் புதிய அணி ஒன்றும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இந்த அணி அதிக இடங்களில் வெற்றி பெறும் தனி அணியாக மாறி, ஏதாவது ஒரு பெரிய தேசிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவும் வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பா.ஜ.க கூட்டணியின் அடுத்த பிரதமர் வேட்பாளர், குஜராத் முதல்வ நரேந்திர மோடிதான் என்பது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், அவர் பிரதமர் ஆவதற்கு பெரும்பான்மை வாக்காளர்களின் ஆதரவு காணப்பட்டது.
அவர் பிரதமர் ஆவதற்கு 37.7 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 17.6 சதவீத ஆதரவை பெற்று பிரதமர் வாய்ப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தற்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு 6.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பவர்கள் 3.9 சதவீதம் பேர் மட்டுமே.
மாநிலங்களைப் பொறுத்தவரை, பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி 14 இடங்களை கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளது. ஆளும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு 11 இடங்களும், லாலுவின் ராஷ்டிரீய ஜனதா தளத்துக்கு 12 இடங்களும், காங்கிரசுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கு 29, தி.மு.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 2 இடம்
தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு 29 இடங்களும், தி.மு.க.வுக்கு 5 இடங்களும், விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு 2 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உ.பி.யில் சமாஜ்வாடி 33 இடங்களிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 27 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.
ஆந்திராவில் காங்கிரசுக்கு 7 இடங்களும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுக்கு 14 இடங்களும், தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு 11 இடங்களும், தெலுங்கு தேசத்துக்கு 9 இடங்களும் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
thedipaar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக