மெக்ஸிகோவில் குமுறிக்கொண்டிருக்கும் எரிமலையிலிருந்து வெளியாகும் சாம்பல்புகை காரணமாக அந்நாட்டுக்கான விமானப் பயணங்களை அமெரிக்க விமான சேவைகள் ரத்துசெய்துள்ளன.
வியாழக்கிமை மெக்ஸிகோ சிட்டி செல்லவிருந்த 40 விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
போப்போகத்தேபெத்ல் எரிமலை ஆண்டு முழுவதும் குமுறிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் முதல் சாம்பல்-புகையை கக்கத் தொடங்கியுள்ளது.
மெக்ஸிகோ சி்ட்டி விமான நிலையத்தில் ஓடுபாதைகள் திறந்தே உள்ளன. எரிமலையால் விமானப் பயணங்களுக்கு பாதிப்பில்லை என்று விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் யூஎஸ் ஏர்வேஸ், டெல்டா, யுனைடட், அமெரிக்கன் மற்றும் அலஸ்கா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சேவைகள் பயணங்களை ரத்துசெய்துள்ளதாக மெக்ஸிகோ விமானநிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெக்ஸிகோ நகர விமான நிலையத்திலிருந்து தென்கிழக்காக 64 கிலோமீட்டர் தொலைவில் இந்த எரிமலை உள்ளது.
எரிமலையைச் சுற்றி 11 கிலோமீட்டர் பகுதியை 'செல்வதற்குத் தடை' உள்ள பகுதியாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
bbc thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக