July 17, 2013 04:43 pm
டிரைவர் இன்றி தானாக ஓடும் கார்கள் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை கேமரா, ரேடார், லேசர் உணர்வு கருவிகள், போன்றவைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளன
.
போக்குவரத்து மிகுந்த சாலைகளில் விபத்துகள் நிகழாமல் தடுக்க இவை உதவிகரமாக இருக்கும். இந்த நிலையில்,தானாக ஓடும் கார்களின் சோதனை ஓட்டம் இந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நிபுணர்களும்,ஜப்பானின் மல்டி நேஷனல் மோட்டார் நிறுவனமான நிஸான் கம்பெனியினரும் இணைந்து அறிவியல் பூங்கா ரோட்டில் இக்காரை வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்தனர்.
இதற்கிடையே, இங்கிலாந்தின் போக்குவரத்து துறை அந்நாட்டின் முக்கிய நகரங்களின் வீதிகளில் சோதனை ஓட்டம் நடத்த அனுமதி அளித்துள்ளது. கார்கள் தானாக இயங்கினாலும், அதன் இருக்கையின் பின்னால் டிரைவர்கள் அமர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் விபத்துகள் நடைபெறாமல் தடுக்க முடியும். தானாக ஓடும் கார்கள் கிராமங்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக