இந்தியாவின் கிழக்கேயுள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
காவல்துறை வாகனத் தொடரணி மீது மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அடக்கம்.
பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்டோர் சார்பில் போராடுவதாகக் கூறும் மாவோயிஸ்டுகள் மே மாதம் சத்திஸ்கரில் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர். சில வாரங்களுக்கு முன் ரயில் மீது அவர்கள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ள பல சிறப்பு மத்திய படைகள் பயன்படுத்தப்படுகின்றன.
bbc thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக