July 10, 2013 04:40 pm
குழந்தையில்லாத பெண்களுக்கு கருமுட்டைகளை அளிக்கும் கலாச்சாரம் தற்போது ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. ஒரு பெண் சாதாரணமாக 10லிருந்து 15 கருமுட்டைகளை அளிக்க இயலும்.
கருமுட்டை தேவைப்படும் தம்பதியர் பிற நாடுகளுக்குச் சென்று செயற்கைக் கருவூட்டல் மருத்துவ முறைகளில் ஈடுபடுவது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாட்டின் மனித இனப்பெருக்கம் மற்றும் கருவளர்ச்சியியல் கழகம், 11ஐரோப்பிய நாடுகளில் இயங்கிவரும் 60மருத்துவமனைகளில் இதுபோல் கருமுட்டை தானம் அளித்த 1,423 பேரிடம் ஆய்வு நடத்தினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுநலம் கருதியே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனர். ஆயினும் பணத்துக்காகவும் இதில் பலர் ஈடுபடுகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
பொதுநலம் கருதி, இந்த தானம் அளிப்பவர்களில் வயது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 25வயதுக்கு உட்பட்டவர்களில் 46 சதவிகித பெண்களும், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில்79 சதவிகித பெண்களும் சேவை நோக்கத்துடன் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர். 25வயதுக்கு உட்பட்டவர்களில் 12 சதவிகிதத்தினரும், 35 வயதுக்கு மேற்பட்டவரில் ஒரு சதவிகிதத்தினரும் இத்தகைய காரியங்களில் வெறும் பணத்திற்காக மட்டுமே செயல்படுகின்றனர் என்று ஆய்வுகள் மூலம் தெரியவருகின்றது
.thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக