சிங்கப்பூரில் வாழும் கடலூர் மாவட்ட மக்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் சிங்கப்பூர் கடலூர் முஸ்லிம் ஜமாஅத் மீண்டும் புதுபிக்கபட்டுள்ளது.
அதன் ஒன்று கூடல் நிகழ்ச்சி சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் பென்கூலனில் 27.07.2013 சனி அன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மமக பொதுச்செயலாளர் M . தமிமுன் அன்சாரி அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு வாழ்த்தி பேசிய பொதுச்செயலாளர், சிங்கப்பூரில் இந்திய முஸ்லிம்களின் வருகை குறித்தும் , தற்போது அவர்கள் அடைந்து வரும் முன்னேற்றங்கள் குறித்தும் பேசினார் .
மேலும் வட்டார உணர்வுகள் மிகைத்து விடாமல் ,பொது நீரோட்டத்தில் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் .
இறுதியாக இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சஹோ. ஹபீப் நன்றி கூற இப்தார் விருந்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது .
கடலூர் மக்கள் பொதுச்செயலாளருடன் தாயக நிகழ்வுகள் குறித்து உரையாடியதுடன் தங்கள் முழு ஒத்துழைப்பும் உண்டு என்றும் உற்சாகப்படுத்தினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக