மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
தர்மபுரியில் காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசனின் மர்ம மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாழவேண்டிய வயதில் ஒரு இளம் தம்பதியினரின் வாழ்வு சிதறடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
மனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டிய ஒரு பிரச்சனையை சாதிய உணர்வோடு சிலர் அணுகியதால் இளம் கணவரான இளவரசன் உயிர் இழந்தது வேதனையாக இருக்கிறது.
இளவரசனின் மரணம் கொலையா? தற்கொலையா? என சந்தேகங்கள் உருவாகி உள்ளதால், இதுகுறித்து நீதி விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
இளவரசனை இழந்த அவரது பெற்றோருக்கு எமது ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
துயரத்தில் இருக்கும் திவ்யாவுக்கு உரிய உளவியல் அறிவுரைகளை நடத்தி, அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் பாதுகாப்பை வழங்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
அதுபோல் இளவரசனின் பெற்றோருக்கும் தமிழக அரசு பாதுகாப்பு கொடுப்பதுடன், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீடும் வழங்க வேண்டும். தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மக்கள் இவ்விஷயத்தில் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
(எம். தமிமுன் அன்சாரி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக