இந்தியாவில் கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வந்த தன் தம்பியை, தனது கள்ளக்காதலனின் துணையுடன் கொலை செய்த அக்கா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
viyapu.com/news_thanks
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கரூர் மாவட்டம், ஒட்டையூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன், வயது-50. இவர் அந்தப் பகுதியில், ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து
வந்தார்.
இவரிடம் தன்னுடைய ஜாதகத்தை பார்க்கப்போன கரூர் ராவலூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவரின் மனைவி மணி என்ற வளர்மதி, வயது-45, இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
அதையடுத்து, கணவனை விட்டு பிரிந்து வந்த வளர்மதி, ரங்கநாதனுடன், நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த ஒருவந்தூரில் பத்து ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்.
இவர்கள், கடந்த ஜூன், 26-ம் திகதி, அவர்களுடைய வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து, மோகனூர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வி.ஏ.ஓ., சுகுமாரன் முன்னிலையில், கொலையான ரங்கநாதனின் சகோதரி சந்திரா, அவருடைய கள்ளக்காதலன் சிவசெல்வராஜ் ஆகிய இருவரும் சரணடைந்தனர்.
சந்திரா கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ‘’என்னுடைய தம்பி ரங்கநாதன், வளர்மதி என்ற பெண்ணோடு இருந்து வந்தார். என்னுடைய கணவர் இறந்து விட்டார். காட்டுப்புத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவசெல்வராஜ், வயது-50, என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
நாங்கள் இருவரும் இப்போது, ஒன்றாக வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், எனக்கு சேர வேண்டிய சொத்தை வழங்காமல், என்னுடைய தம்பி ரங்கநாதன் ஏமாற்றி வந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த நான், சிவசெல்வராஜ் துணையுடன், திண்டுக்கல்லைச் சேர்ந்த செந்தில்குமார், திருச்சியைச் சேர்ந்த மதன்குமார், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சையதுபாஷா ஆகிய மூன்று கூலிப்படையினரை வரவழைத்தோம்.
அவர்களுக்கு, இரண்டு இலட்சம் ரூபாய் பணம் கொடுத்தோம். கடந்த மாதம், 26-ம் திகதி வீட்டில், ரங்கநாதனும், அவருடன் வளர்மதியும் தனிமையில் இருந்தனர்.
அப்போது, கூலிப்படையினர் அவர்களை கழுத்து அறுத்து கொலை செய்தனர். தற்போது பொலிஸ் தேடுவதை அறிந்து, காட்டுப்புத்தூர் வி.ஏ.ஓ., முன் நானும், சிவசெல்வராஜூம் ஆஜராகிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
ரங்கநாதனை கொலை செய்த கூலிப்படையினரை பிடிக்க, பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக