இலங்கையிலிருந்து 16,000 க்கும் அதிகமானவர்கள் சவுதியிலிருந்து வெளியேற தற்காலிக அனுமதி பத்திரத்தை கோரியுள்ளார்கள் என சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் தொடர்பிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வருவது நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேற பல நாட்டவர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
தமது நாட்டில் பணி புரிபவர்கள் முறையான அனுமதியை பெற்றிருக்க வேண்டும், சவுதி அரேபிய குடிமக்களுக்கு வேலைகளில் முன்னுரிமை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் நிதாகத் எனும் புதிய சட்டத்தை அந்நாடு அறிமுகப்படுத்தியது.
இதன் காரணமாக இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்படக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து பல நாடுகள் சவுதி அரேபிய அரசிடம் முறையிட்டன. இந்தியா உட்பட பல நாடுகள் ராஜதந்திர ரீதியில் அழுத்தங்களையும் பிரயோகிக்க ஆரம்பித்தன.
ஒத்திவைப்பு
பன்னாட்டு வேண்டுகோள்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக இன்று(3.7.13) நடைமுறைக்கு வரவிருந்த சட்டத்தை நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக சவுதி மன்னர் அறிவித்தார்.
சவுதி அரேபியாவில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றி வருவதாகவும் அவர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தம்மீதான நடவடிக்கையை தவிர்க்கும் பொருட்டு நாட்டைவிட்டு வெளியேற தற்காலிக அனுமதி பத்திரங்களை கோரியுள்ளதாகவும் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சவுதியில் வேலைக்கு செல்லும் பலரது கடவுச் சீட்டுகள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் அல்லது முதலாளிகளால் கைப்பற்றப்படுகின்றன தேவைப்படும் போது தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று நீண்ட காலமாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன.
இலங்கைக்கு திரும்பிச் சென்று, பின்னர் உரிய முறையில் அனுமதி பெற்றும் மீண்டும் சவுதிக்கு வேலைக்கு வர விரும்புவர்களுக்கு அரசும், தமது தூதரகமும் வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் கிருஷ்ணமூர்த்தி கூறுகிறா
ppc thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக