- FRIDAY, 05 JULY 2013 15:27
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதால், வெள்ளிக் கிழமைகளில் ரேஷன் கடைகள் இயங்காது. அதற்குப் பதிலாக ஞாயிற்று கிழமை இயங்கும் என்றும் தெரிய வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 521 ரேஷன் கடைகள் உள்ளன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இயங்குகின்றன. ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறையாக உள்ளதால் வேலைக்கு செல்வோர் பொருட்கள் வங்க சிரமப்படுகின்றனர்.
இதையடுத்தி இனி ரேஷன் கடைகள் வாரத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்று கிழமைகளில் இயங்கும் என்றும், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளி கிழமைகளில் விடுமுறை நாட்களாக இருக்கும் என்றும் அரசு முதலில் அறிவித்தது.இதன் படி, ரேஷன் கடைகள் விடுமுறைகள் குறித்த புதிய நடைமுறையில் ரேஷன் கடைகள் விடுமுறை குறித்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால், மாதத்தின் முதல் மற்றும் இரண்டாம் வெள்ளிக் கிழமைகளில் இன்றும் வரும் 12ம் திகதியும் ரேஷன் கடைகள் இயங்காது. இதற்கு பதிலாக வரும் ஞாயிற்றுக் கிழமை மற்றும் 14ம் திகதி ரேஷன் கடைகள் செயல்படும்.
இதுகுறித்து, உணவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "புதிய நடைமுறையில் ரேஷன் கடை விடுமுறை குறித்த விவரம் அனைத்தும் சுற்றறிக்கை மூலம் ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது." என்றார். மலிவு விலை காய்கறி கடைகளுக்கும் வெள்ளிக்கிழமை தோறும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதை அடுத்து, இன்று மலிவு விலைக் கடைகள் செயல்படாது. இதற்கு பதிலாக அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் இந்த கடைகள் செயல்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக