மட்டக்களப்பு ஒட்டமாவடி பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பாடசாலையொன்றின் விளையாட்டு மைதானத்தின் நடுவில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பிரதேச முஸ்லிம்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
முழுமையாக முஸ்லிம்கள் மட்டும் வாழும் இப்பிரதேசத்திலுள்ள பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்திலே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மைதானத்தின் நடுவில் மேசையொன்றில் புத்தர் சிலை வைக்கப்பட்டு, நிழலுக்கு குடையொன்றும் நடப்பட்டுள்ளதை மறுநாள் காலையில் தாங்கள் கண்டதாகக் கூறும் பாடசாலை நிர்வாகம் வாழைச்சேனை காவல்துறையில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கின்றது.
பிறைந்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திற்குரிய குறித்த விளையாட்டு மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ளது.
காணி உரிமை தொடர்பாக ஏற்கனவே விகாராதிபதிக்கும் பாடசாலை நிர்வாகத்திற்குமிடையில் ஏற்கனவே முரண்பாடு இருந்துள்ளது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இக்காணி அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுவியா வித்தியாலயம் ஆகியவற்றினால் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பாடசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவிக்கின்றது.
2004ம் ஆண்டு மார்ச் மாதம் 1ம்திகதி அன்று விகாராதிபதி மைதானத்திற்குரிய எல்லை சுற்று மதிலை அகற்றி இந்த காணி விகாரைக்கு சொந்தமான காணி என்றும், வெளி ஆட்கள் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஒரு தடவை அறிவித்திருந் நிலையில் காணி உரிமை தொடர்பாக எழுந்த இந்தப் பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
வாழைச்சேனை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இது குறித்த வழக்கொன்றில், இந்த காணி, விளையாட்டு மைதானத்திற்குரிய காணி என்று தீர்ப்பளிக்கப்பட்டது என்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மேலும் தெரிவிக்கின்றது.
bbc thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக