- FRIDAY, 05 JULY 2013 13:14
கடன் வட்டியை குறைக்க வங்கிகள் முன்வரவேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் ரிசர்வ் வங்கி போர்டு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுனர் சுப்பாராவ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "மோசடி நிதி நிறுவனங்களைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பல்வேறு மோசடித் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றும் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
சோதனை முயற்சியாக மாநில அரசுகளுடன் இணைந்து 11 குழுக்களை அமைத்து 2 மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறோம். இக்குழுக்களின் அறிக்கை அடிபடையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கடனுக்கான வட்டியைக் குறைக்க வேண்டும் மத்திய நிதி அமைச்சர் கோரியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று சில வங்கிகள் வட்டியைக் குறைத்துள்ளன. இதர வங்கிகளும் வட்டியைக் குறைக்க முன்வரவேண்டும்.
புதிய வங்கி தொடங்க 26 நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. அவற்றை பரிசீலித்து இன்னும் 3அல்லது 4 மாதங்களில் விதிமுறைக்குட்பட்டு, லைசென்ஸ் வழங்கப்படும். லைசென்ஸ் வழங்குவதில் தபால் துறை உள்ளிட்ட எந்த நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படாது .
அமெரிக்க் அடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் வங்கிகளுக்கு ஏற்படும் கடன் சுமையை குறைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்." என்று கூறியுள்ளார்.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக