WEDNESDAY, 31 JULY 2013
'ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர சட்டத்துறை அமைச்சர் தமது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் கொடுத்துள்ளார்.
ஆந்திராவில் தனி தெலுங்கானா வேண்டாம் என்பவர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ஆந்திராவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றாலும் அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. சென்னையில் இருந்து சேலம், பழனி, தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக ஆந்திரா செல்லும் சுமார் 106 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆந்திராவிற்குள் நுழைய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனால், கிருஷ்ணகிரி எல்லையிலேயே அனைத்து பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் திருப்பதியில் இன்று 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பக்தர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனித்தெலுங்கானா அமைந்தால் தாம் பதவியை ராஜினாமா செய்யபோவதாக முதலில் அறிவிப்பு வெளியிட்ட கிரண்குமார் ரெட்டி, தற்போது அந்த முடிவில் இருந்து பின்வான்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்நிலையில் அவரது அமைச்சரவையின் சட்டத் துறை அமைச்சர் பிரதாப் ரெட்டி, தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவரை அடுத்து மேலும் பல அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக