FRIDAY, 05 JULY 2013 10:40
தேர்தல் காலப்பிரச்சாரங்களின் போது இனி அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பதை தடுக்கும் வகையில் கொள்கை வகுக்குமாறு தேர்தல் ஆணையகத்திற்கு உச்ச நீதிமன்றம் வலியிறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியில் இலவசமாக தொலைக்காட்சி அளிக்கப்படும் என்ற அறிவிப்பு லஞ்சம் வழங்குவது போன்றது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அவர் இலவச அறிவிப்புக்கள் மக்கள் அளிக்கும் வாக்கில் நிச்சயம் பிரதிபலிக்கும். இலவச பொருட்கள் அறிவிப்பதை தடுக்க கொள்கைகள் வகுக்க வேண்டியது அவசியமானது. எனினும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 123ன் படி, அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில், இலவசமாக தொலைக்காட்சியோ, லேப்டாப்போ அளிப்பதாக உறுதி அளிப்பதை லஞ்சமாக கருதமுடியாது எனக்கூறினார்.
தமிழகத்தில் முன்னைய திமுக ஆட்சியின் போது வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு இணைப்புடன் கூடிய ஸ்டவ்கள் போன்றன தேர்தல் வாக்குறுதியின் படி இலவசமாக வழங்கப்பட்டன.
அதன் பின்னர் அமைந்த அதிமுக ஆட்சியில், லேப்டாப்கள், மிக்சி,கிரைண்டர், மின்விசிறி என்பன இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான இலவச வாக்குறுதிகள் வழங்கப்படுவது, ஜனநாயக முறைப்படி நடைபெறும் தேர்தலின் அடித்தளத்தில் ஆட்ட காணச்செய்கிறது. எனவே தேர்தல் ஆணையம் இது தொடர்பில் முறையான கொள்கைகளை வகுக்க வேண்டும் என கூறியுள்ளது.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக