வட கொரியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று பனாமா கால்வாயின் சென்று கொண்டிருந்தபோது சோதனையிடப்பட்டதில், பலாஸ்டிக் ரக ஏவுகணைகள் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த சர்க்கரை மூடைகளுக்கு கீழே கன்டெயினர்களில் ஏவுகணைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்தக் கப்பல் கியூபாவில் இருந்து வடகொரியா நோக்கி சென்று கொண்டிருந்ததாக,
கப்பலில் கிடைத்த ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. வழமையாக, பனாமா கால்வாயில் வேறு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களை பனாமா கடற்படை சோதனையிடுவது வழக்கம் இல்லை. ஆனால், தமக்கு வெளிநாட்டு உளவுத்துறை ஒன்றிடம் இருந்து கிடைத்த உளவுத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று பனாமா அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தகவல் கொடுத்த வெளிநாட்டு உளவுத்துறை எது என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். கப்பல் சோதனையிடப்பட்டபோது, அதில் 35 மாலுமிகள் இருந்தனர்.
அவர்கள், சோதனை அதிகாரிகளுடன் வன்முறையில் ஈடுபட முயன்றதால், கைது செய்யப்பட்டு பனாமாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சோதனை நடந்தபோது, கப்பல் கேப்டனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. கப்பலில் ஏவுகணைகள் அகப்பட்டது தொடர்பாக கியூபாவோ, வட கொரியாவோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்தக் கப்பல் தொடர்பாக அமெரிக்காவுக்கு வேறு சில ஆர்வங்களும் இருக்கலாம். காரணம், இதே கப்பல் ‘எதற்காகவோ’ ஒரு முறை சிரியாவில் உள்ள டார்டஸ் துறைமுகத்துக்க அருகில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்துக்கு சென்று வந்துள்ளது.
News :Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக