மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இரு வழக்குகளில் வழக்கறிஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்குகளை நீதிபதி தள்ளுபடி செய்த சம்பவம், வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் புலவர் சுந்தர்ராஜன் என்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியர், தனது புதிய வீட்டிற்கு பிளான் அப்ரூவல் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் ...
ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இதுபோல், மதுரையை சேர்ந்த ஆயிஷா பானு என்ற பெண்மணி மெக்காவில் பரிதவித்துக் கொண்டிருக்கும் தனது கணவரை மீட்டுத்தர கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளிலும் வழக்கறிஞர் பகத்சிங் கோர்ட்டில் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்குகளின் விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் பகத்சிங் தமிழில் வாதாடியபோது, நீதிபதி மணிக்குமார் “ஆங்கிலத்தில் வாதாடுங்கள்” என்று கூறினார். வழக்கறிஞர் பகத்சிங், “எனக்கு தமிழில் வாதாடுவதுதான் சுலபமாக இருக்கிறது.
அத்துடன், எனது கட்சிக்காரருக்கும் நான் என்ன சொல்கிறேன், எப்படி வாதாடுகிறேன் என்று புரியும்” என்று கூறினார். அதை ஏற்க மறுத்த நீதிபதி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்தார். மதுரையிலேயே தமிழில் வாதாட முடியாதா? தமிழில் வாதாடிய ஒரே காரணத்துக்காக வழக்கை தள்ளுபடி செய்வதா என்று தமிழ் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வழக்கறிஞர் பகத்சிங், “ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு அனுமதி கோரி, தமிழக சட்டமன்றத்தில் 2006-ம் ஆண்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அது சம்பந்தமாக நடவடிகை எடுக்கப்படவில்லை. 2010-ம் ஆண்டு, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராடியதைத் தொடர்ந்து ‘தமிழில் வாதாடலாம். அதற்கு தடையில்லை’ என்று நீதிபதிகள் வாய்மொழி உத்தரவு கொடுத்தனர். இதை வைத்து கடந்த 2 வருடங்களாக தமிழில் வாதாடி வருகிறோம். இந்த நிலையில் நீதிபதி மணிக்குமார் இவ்வாறு செய்திருப்பது எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. தமிழில் வாதாடுவதற்கு சட்டபூர்வமாக அனுமதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்” என்றார்.
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக