July 10, 2013 04:44 pm
சவுதி அரேபியாவில் இளம்வயது மனைவியை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு,கொலையை மறைக்க வீட்டை தீயிட்டு கொளுத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெத்தா நகரில் உள்ள மேற்கு செங்கடல் துறைமுகம் அருகே உள்ள 3 அடுக்கு மாடி வீட்டில் 20 வயது இளம்பெண் அவரது கணவருடன் வாழ்ந்து வந்தார்.
சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையில் ஏற்பட்ட தகராறு பெரிய அளவில் முற்றியதால் ஆவேசமடைந்த கணவன், மனைவியை கத்தியால் குத்திக் கொன்றார்.
கொலை போன்ற கொடுங்குற்றங்களுக்கு அந்நாட்டில் மரண தண்டனை விதிக்கப்படுவதால் தண்டனையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்த கொலையாளிக்கு ஒரு யோசனை தோன்றியது.
செங்கடல் துறைமுகம் அருகே வீடு பற்றி எரிவதாக வந்த தகவலை அடுத்து விரைந்து வந்த மீட்புப்படையினர் தீயை அணைக்க கடுமையாக போராடிக் கொண்டிருந்தனர்.
தீயை அணைக்க அவர்கள் நடத்தும் போராட்டத்தை அதே கட்டிடத்தில் வசிக்கும் நபர் மரத்தின் மறைவில் இருந்து கண்டு ரசிப்பதை மற்றொரு குடித்தனக்காரர் பார்த்து விட்டார்.
இத்தகவலை அவர் அவசரமாக போலீசாருக்கு தெரிவிக்கவே போலீசார் அவரை கைது செய்தனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவளை குத்திக் கொலை செய்து விட்டதாகவும், கொலையை மறைக்க வீட்டை தீயிட்டு கொளுத்தியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து குற்றவாளியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக