பெருநாட்டில் 6.2 ரிக்டர் அளவில் கடும் நில நடுக்கம்!
தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பெருநாட்டில் தென்பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமும் பீதியும் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். இந்த நிலநடுக்கம் ஆர்கியூபாவின் வடமேற்கே பூமிக்கு அடியில்...
84.கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்களும், காயமடைந்தவர் விவரங்களும் வெளியிடப்படவில்லை.
eutamila thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக