- WEDNESDAY, 24 JULY 2013 10:34
சென்னையில் 800 பெண் போலீசார் உட்பட 2 ஆயிரத்து 500 போலீசார் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீஸ் நிலையங்களுக்கு ஏற்ப போலீசார்கள் இல்லாத காரணத்தினால் இந்த அவசர நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
சென்னை மாநகரில் 134 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 18 ஆயிரம் போலீசார் பணியாற்ற வேண்டும்.ஆனால், 4 ஆயிரத்து 700 போலீஸ் பணியிடங்கள் காலியாக இருந்தது. இதனால் பெரும்பாலான போலீஸ் நிலையங்களில், போலீசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. மற்ற பெரு நகரங்களோடு ஒப்பிடுகையில், சென்னை மாநகரில் போலீசாரின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது.
போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னையில் போலீஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்தி நீண்ட நாட்களாக காலியாக இருந்த இடங்களை பூர்த்தி செய்ய அரசு உத்தரவிட்டது.
ஆயுதப்படை பிரிவில் இருந்து 800 போலீசார் உட்பட 2 ஆயிரத்து 500 போலீசார் சென்னை நகர போலீஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டனர். இவர்கள் தற்போது போலீஸ் பணியில் சேர்ந்து விட்டனர். இந்த 2 ஆயிரத்து 500 போலீசாரும் சட்டம்-ஒழுங்கு பிரிவிற்கு நியமிக்கப்பட்டு வருகிறார்கள். குறைந்த பட்சம் 4 போலீசாரில் இருந்து அதிகபட்சம் 20 போலீசார் வரை சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். கவுன்சிலிங் மூலம் விரும்பிய போலீஸ் நிலையங்களில் இவர்களுக்கு பணி ஒதுக்கப்படுவதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

4tamilmedia thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக