இந்தியாவின் வடபிராந்தியத்தில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரக்காண்ட் மாநிலத்தில் 15 பேரும், ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உத்தரகாண்டில் 40 ற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை உத்தரகாண்ட் மாநிலத்திற்கு யாத்திரை சென்ற ஆயிரக்கணக்கானவர்கள், பாலங்கள் உடைந்து வீழ்ந்துள்ளதால் நிர்க்கதியாகியுள்ளனர்.
இதேவேளை பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற ஏனைய வடபிராந்திய மாநிலங்களிலும் கடும் மழை பெய்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜூன் மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழை, இந்தியாவின் விவசாய துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
.newsfirst thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக