
June 2, 2013 11:20 am
தெற்கு பிலிப்பைன்ஸில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கார்மென் பகுதியில் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பல்வேறு இடர்பாடுகளில் இரண்டு கிராமங்களை சேர்ந்த 8 குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர்.
கிமாத்ஷில் பகுதியில் பாலங்கள், பள்ளி கட்டிடங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்துள்ளன என்று அந்நாட்டு பொலிசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்மென் பகுதிக்கு 10 கிலோமீட்டர் மேற்கு திசையில் நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் செஸ்மோலொஜி கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
thamilan. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக