puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 25 ஜூன், 2013

உலகளவில் பாலியல் தொந்தரவால் மூன்றில் ஒரு பெண் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்


[ செவ்வாய்க்கிழமை, 25 யூன் 2013,
உலகம் முழுவதும் 3ல் ஒரு பெண் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் மிகப்பெரிய அளவில் ஆய்வும், கருத்துக் கணிப்பும் நடைபெற்றது.
கடந்த 1983ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை குடும்பங்களில் வன்முறை என்ற தலைப்பில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 86 நாடுகளில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பெண்கள், 56 நாடுகளை சேர்ந்த பெண்களிடம் குடும்ப உறவில் செக்ஸ் கொடுமை குறித்து சர்வேயில் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் மார்கரெட் சான் கூறியதாவது, உலகம் முழுவதும் உள்ள 40 சதவிகித பெண்கள் பல்வேறு கொடுமைகள், சித்ரவதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர்.
பெண்களை அடிப்பது, கன்னத்தில் அறைவது, ஆயுதங்களால் தாக்குவது, விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் வைத்து கொள்ள கட்டாயப்படுத்துவது உள்பட பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் அதிகமாக துன்புறுத்தப்படுகின்றனர்.
மிகவும் நம்பகமாக உள்ள அவர்களது கணவன், காதலன் அல்லது கூட்டாளிகளே அவர்களை பல்வேறு காரணங்களுக்காக கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இத்தகைய கொடுமைகள் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 37 சதவிகிதம் நடைபெறுகிறது.
லத்தீன் மற்றும் தென் அமெரிக்காவில் 30 சதவிகிதமும், வட அமெரிக்காவில் 23 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
ஐரோப்பா மற்றும் ஆசியாவில் 25 சதவிகிதம் பெண்கள் கொடுமைக்கு ஆளாகின்றனர். 85 சதவிகித பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை பல்வேறு விழிப்புணர்வு மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

world.lankasri. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக