puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 19 ஜூன், 2013

அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றமையால் மாதாந்த கொடுப்பனவை வெட்டிய அவுஸ்திரேலிய நிறுவனம்


அடிக்கடி சிறுநீர் கழிக்க
அவுஸ்திரேலியாவில், அலுவலக நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்ற ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் உள்ள, "ஏஜிஸ் அவுஸ்திரேலியா' என்ற தொலைபேசி நிறுவனத்தில், ஏராளமான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

இங்குள்ள ஊழியர்களின் வருகைப் பதிவை கணக்கிடவும், பணி நேரத்தில் இருக்கைகளிலிருந்து அநாவசியமாக எழுந்து செல்லாமல் இருக்கவும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் படி, ஒவ்வொரு ஊழியரின் மேஜையிலும், ஒரு எலக்ட்ரானிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஊழியர், தன் இருக்கையை விட்டு, 90 விநாடிகளுக்கு மேல், எழுந்து சென்றால், அவர்களின் கணினி தானாகவே "ெலாக்' ஆகிவிடும் எழுந்து சென்றதற்கான காரணத்தை பதிவு செய்த பின்னரே, கணினி மீண்டும் செயற்படத் தொடங்குமாம்.

இவ்வகையில் அடிக்கடி சிறுநீர் கழிக்க சென்றதாகக் கூறி அந்நிறுவன ஊழியர்கள் மூன்று பேரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து, மூவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு பதிலளித்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் உணவு இடைவேளை, தேநீர் இடைவேளை, மாலையில் ஒரு முறை இடைவேளை என பல சலுகைகளை தருவதாக தெரிவித்தது. ஊழியர்கள் அநாவசியமாக தங்கள் இருக்கையிலிருந்து எழுந்து செல்வதால் பணி பாதிக்கப்படுவதாகவும் எனவே சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது.

இதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் இயந்திரக் கோளாறு காரணமாகவே, சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து மூன்று ஊழியர்களுக்கும் சரியான சம்பளத்தை வழங்கி, நிறுவனம் சமாளித்துள்ளது
viyapu thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக