puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

திங்கள், 3 ஜூன், 2013

தனித் தெலுங்கானா பிரச்சனையில் இந்த மாதம் முடிவு எடுக்கப்படும்:குலாம்நபி ஆசாத் தகவல்!


ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது, போராட்டமும் மறுபடியும் தொடங்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர், தனித் தெலுங்கானா கோரிக்கை வைப்பவர்கள்.

இது குறித்து இந்த மாதம் முடிவு எடுக்கப்படும் என்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

விரைவில் தனி தெலுங்கானா அமைப்பது குறித்து முடிவு எடுத்து, அதை அறிவிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் காங்கிரஸ் தலைமைக்கு கெடு விதித்து இருந்தனர். ஆனால், இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாததால் அவர்கள் கட்சியில் இருந்து விலகியதோடு, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலும் இணைந்து விட்டனர். இந்த இணைப்பு விழா நேற்று ஹைதராபாத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றதாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குலாம் நபி ஆசாத், "காங்கிரஸ் எம்பிக்கள் கட்சி மாறி இருப்பது, தெலுங்கனா விவகாரத்துக்காக அல்ல. அவர்களின்  சொந்த லாபத்துக்காக கட்சி மாறியுள்ளனர்.தெலுங்கானா விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதுத் தொடர்பாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி உள்ளது.

தெலுங்கானா அமைவதில் மக்களிடம் எந்தளவு ஆதரவு  உள்ளதோ அந்த அளவு எதிர்ப்பும் உள்ளது. எனவே இதில் எடுத்தோம் கவிழ்த்தோம்  என்று முடிவு எடுக்கமுடியாது. இதில் இன்னும் பல கட்ட  பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது. காங்கிரஸ் உயர்மட்டக் குழு இந்தமாதம் பிரதமர் தலைமையில் டெல்லியில் நடக்கிறது. இதில் தெலுங்கானா பிரச்சனை குறித்து முடிவு எடுக்கப்படும். காங்கிரசில் இருந்து விலகியவர்கள், தெலுங்கானாவுக்காக விலகவில்லை. வரும் தேர்தலில் தங்களுக்கு மீண்டும் எம்பி சீட் வழங்க வேண்டும், தங்களது வாரிசுகளுக்கு எம் எல் ஏ சீட் வழங்க என்று மிரட்டி வந்தனர். உறுதி மொழி அளிக்காததால், அவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால், உண்மையான காங்கிரசார் தெலுங்கானா விவகாரத்தில் கட்சி எடுக்கும் முடிவுக்காக காத்து இருக்கின்றனர்.

காங்கிரசில் இருந்து யார் விலகினாலும் அதனால் கட்சி பாதிக்காது, மத்திய மாநில அரசின் நல்ல திட்டங்களால் ஆந்திர மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். வரும் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என்று கூறியுள்ளார்.

4tamilmedia. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக