சிரியா யுத்தத்தில் சர்வதேச பலப்பரீட்சை தொடங்கிவிட்டது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அங்கே மறைமுகமாக பலப்பரீட்சை செய்யப்போகின்றன. இதற்குமுன்,
லிபியா, எகிப்து, என்று வெவ்வேறு நாடுகளில் உள்நாட்டு யுத்தம் நடந்து, ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோது, அமெரிக்கா உட்பட வெளிநாட்டு கரங்கள் மறைமுக உதவிகளையே செய்தன. அவ்வளவு ஏன், இதுவரை சிரியா ராணுவத்துக்கு எதிராக நடக்கும்...
உள்நாட்டு யுத்தத்திலும், போராளிப் படையினருக்கு ஆள் பலத்தில் இருந்து, ஆயுத பலம், நிதியுதவி எல்லாம் ‘மறைமுகமாக’ வெளியில் இருந்தே வந்தன. ஆனால், இனி சிரியா யுத்தத்தில் காட்சி மாற்றங்களுக்கு சான்ஸ் உள்ளது. ‘சக்தி வாய்ந்த’ நாடுகள் வெளிப்படையாகவே களத்தில் இறங்க போகின்றன. சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா நிற்கிறது. சிரியா அரசு ராணுவத்துக்கு எதிராக போராடும் போராளி அமைப்பினர் பக்கமாக அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேலை நாடுகளும், சில அரபு நாடுகளும் நிற்கின்றன. சந்தடி சாக்கில் இஸ்ரேல், சிரியா அரசை கவிழ்க்க பார்க்கிறது.
ரஷ்யா தமது இரு போர்க் கப்பல்களை சிரியாவுக்கு அனுப்புவதாக அறிவித்தது. அது சிரியா அரசுக்கு ஆதரவான மூவ். அமெரிக்கா, சிரியா அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிக் குழுக்களுக்கு ஆயுதம் கொடுக்கப்போவதாக கூறியுள்ளது. அந்த ஆயுதங்களில் ஒரு பகுதிதான் கடந்த சில தினங்களில் சிரியாவுக்கு உள்ளே போராளி அமைப்பினரின் கைகளுக்கு போயுள்ளன. மீதி ஆயுதங்கள் இனிமேல்தான் போய் சேர வேண்டும். சிரியாவில் நடக்கும் யுத்தத்தில் போராளி அமைப்பினர் சமீப காலமாக சறுக்கல்களையே சந்தித்து வருகின்றனர். அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த முக்கியமான 3 நகரங்களை ராணுவம் மீள கைப்பற்றி விட்டது. போராளி படையினர் அந்த நகரங்களை கைவிட்டு பின்வாங்கி செல்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.
இப்படி தோல்வி முகத்தில் உள்ள போராளிப் படையினர், அமெரிக்க ஆயுதங்கள் கிடைத்தால், முதலில் தாம் இழந்த நகரங்களை கைப்பற்றி, பலப்படுத்திக் கொண்டு, தலைநகர் டமாஸ்கஸ்ஸை கைப்பற்ற வேண்டும். அதன் பின்னரே ஜனாதிபதி அசாத்தின் ஆட்சியை அகற்ற முடியும். அது சுலபமாக நடக்க ரஷ்யா விட்டுவிடாது. சிரியா ராணுவத்துக்கு ஆயுத ஸ்டாக் முடிய முடிய, ‘எப்படியோ’ ரஷ்ய ஆயுதங்கள் போய் சேருகின்றன. அவற்றில் சமீபத்தில் வெளிப்படையாக அறிவித்துவிட்டு கொடுக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணைகளும் அடக்கம்.
சிரியா ராணுவம் நகரங்களுக்குள் புகுவதையும், போராளிப் படையினரை துரத்துவதையும், சிரியா விமானப்படை நகரங்களில் குண்டு வீசுவதையும், நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும், போராளிப் படையினர் கைவிட்டு பின்வாங்கி சென்ற நகரங்களில் ஓடிச் சென்று பொசிஷன் எடுப்பதையும்,
ஒரு நகரம் (அல்-சபா பாரத் மாவட்டம்) கைப்பற்றப்பட்டபின், ராணுவத்தினருக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுவதையும், கைப்பற்றிய நகர வீதிகளில் ராணுவத்தினர் ரோந்து செய்வதையும், போராளிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அடுத்த நகரத்தை கைப்பற்ற செல்வதையும், போராளிப் படையினரிடம் இருந்து மீட்கப்பட்ட வீதியில், சாதாரண வாகனங்களில் ஆயுதங்கள் பொருத்தி காவல் காப்பதையும், வீதிகளில் டாங்கிகள் சகிதம் ரோந்து செய்வதையும் ,
ஆரம்பத்தில் அடி வாங்கிய ராணுவம், ரஷ்ய ஆயுதங்கள் வந்து சேர்ந்தபின் வெற்றி முகம் காட்டுவதை இனி, அமெரிக்க ஆயுதங்கள் போய், போராளி அமைப்புகளின் தோல்வி முகத்தை மாற்ற வேண்டும்… அல்லது.. அல்லது.. அல்லது.. அங்கிள் சாம், ஜோர்தான் எல்லை ஊடாக தானே நேரில் களத்தில் இறங்க வேண்டும். இந்த பரமபத விளையாட்டு, இன்றும் சிறிது காலத்துக்கு தொடரப் போகிறது. எதிர்பாராத மாற்றங்கள் சில ஏற்பட சான்ஸ் உள்ளது.
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக