மண்டேலா உடல்நிலை மோசமடைந்தது: சிகிச்சையை நிறுத்த குடும்பத்தினர் ஆலோசனை!
தென்ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர் நெல்சன் மண்டேலா (94). கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பின் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும்...
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது முக்கிய உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாடுகள் 50 சதவீதம் குறைந்து விட்டன. மேலும் சில உடல் உறுப்புகளும் செயல் இழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை நிறுத்த அவரது குடும்பத்தினர் டாக்டர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். ஆனால் மண்டேலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தென் ஆப்பிரிக்க அரசு அறிவித்துள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.
News :Source
eutamilar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக