June 24, 2013 05:16 pm
கடந்த 2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் தனது லட்சியத் திட்டமான கூகுள் வரைபடத் தயாரிப்பிற்காக உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இதற்கெனத் தயாரிக்கப்பட்ட சிறப்புக் கார்களை அனுப்பியது.
கூகுள்´ஸ் ஸ்ட்ரீட் வியு என்று அழைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழு் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மைல்கள் பயணம் செய்த இந்தக் கார்கள், இவற்றில் பொருத்தப்பட்டிருந்த பிரத்தியேகக் கருவி மூலம், இயற்கை எழில் மிகுந்த பகுதிகளுடன் சாலைகளின் வரைபடங்களை பதிவு செய்தன.
ஆனால், அப்போது பணியில் இருந்த பொறியாளர் ஒருவர், இந்தக் கார்களின் அருகில் கடந்து செல்வோரின் பாதுகாப்பில்லாத இணையதளப் பதிவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரு மென்பொருள் கருவியைத் தயாரித்து இந்தக் கார்களில் பொருத்தியுள்ளார். அதில் பலரது சொந்த விஷயங்களும், நிதி விபரங்களும் பதிவாகியுள்ளன. இது தங்களது எண்ணமல்ல என்று தெரிவித்த கூகுள் நிறுவனம் அத்தகையத் தகவல்களை அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால், இதுபோல் பதிவு செய்யப்பட்ட சில தகவல்களைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாக பிரிட்டிஷ் தகவல் அறியும் அலுவலகத்தில் இருந்து கூகுள் நிறுவனத்திற்கு ஒரு அறிக்கை வந்துள்ளது.
இம்மையத்தின் கமிஷனர் ஸ்டீபன் எக்கர்ஸ்லெ, இதுபோன்ற தகவல்களை 35நாட்களுக்குள் அழித்துவிடவேண்டும் என்று சட்டபூர்வமாக கூகுள் நிறுவனத்திற்கு அறிக்கை விடப்படுகின்றது. இதனை செய்யத் தவறினால், நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
thamilan thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக