புதுடெல்லி, ஜூன் 23-
மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி புதுடெல்லி வந்துள்ளார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவு குறித்த நான்காவது கட்ட பேச்சுவார்த்தையில் ஜான் கெர்ரி கலந்து கொள்கிறார். இந்தியாவில், எரிசக்தி துறையில் 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கெர்ரியுடன் அமெரிக்க உயர்மட்ட தலைவர்கள் குழு ஒன்றும் இந்தியா வந்துள்ளது.
25ம் தேதி வரை இந்தியாவில் தங்கியிருக்கும் ஜான் கெர்ரி, நாளை மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தபோது சென்னை, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் சில பெருநகரங்களுக்கு பயணம் செய்து முக்கிய இடங்களை பார்வையிட்டார்.
ஆனால், ஜான் கெர்ரி புதுடெல்லியில் மட்டும் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.

maalaimalar thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக