மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக அதன் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க., சார்பில் மீண்டும் போட்டியிட கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்து விட்டது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜாவஹிருல்லா, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். அவருடன் ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ அஸ்லாமும் உடனிருந்தார்.
மாநிலங்களவைத் தேர்தல் விவகாரம் திமுக ஆதரவு கோரியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிறகு, மாநிலங்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக