puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 18 ஜூன், 2013

இறந்து போனவர் உயிர் பிழைத்த அதிசயம்

[ செவ்வாய்க்கிழமை, 18 யூன் 2013
இறந்து போனதாகக் கருதப்பட்ட ஒருவர் உயிர் பிழைத்து மீண்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் சிருங்கேரி சங்கரமடம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ரமணா ஐயர் என்பவரின் மகன் ரவி சாஸ்திரி(வயது 45).
இவர், தேவிப்பட்டனம் திலகேஸ்வர சுவாமி கோயிலில் அர்ச்சகராக உள்ளார். இவர் கடந்த 13ம் திகதி இதயக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். இந்நிலையில் இதயக் கோளாறு காரணமாக 16ம் திகதி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
இதை அடுத்து அவரை வீட்டுக்குக் கொண்டு வந்தனர். இறுதிச் சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பந்தல் கட்டி உறவினர்களும் கூடிவிட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு திடீரென அவரது கால் விரல் அசைந்துள்ளது. பின்னர் காலில் சிறிதளவு இயக்கம் இருந்துள்ளது.
இதை கவனித்த சிலர் அவரை உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அப்போது, அவர் உயிருடன் இருப்பதும், அவரது இதயம் பலவீனம் அடைந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர் இதய நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை உறவினர்களுடன் உற்சாகமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாராம்.
இதுகுறித்து இவரது மனைவி புவனா கூறுகையில், சிவ பெருமானைத் தொடர்ந்து பூஜை செய்து வந்தோம். சிவபெருமானின் அருளால் அவர் உயிருடன் மீண்டுள்ளார் என்று உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார்.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக