puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

புதன், 12 ஜூன், 2013

ஆர்.எஸ்.எஸ்ஸிடம் அத்வானி சரண்டர்!


006_lk_advani
புதுடெல்லி:பா.ஜ.கவில் 36 மணிநேரம் நடந்த கலகத்திற்கு தற்காலிக ஓய்வு.ஆர்.எஸ்.எஸ்ஸின் அழுத்தத்திற்கு கட்டுப்பட்டு கட்சி பொறுப்புகளிலிருந்து ராஜினாமாச் செய்யும் தனது முடிவை எல்.கே.அத்வானி வாபஸ்பெற்றுள்ளார். பா.ஜ.கவின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

நேற்று மாலை அத்வானியின் வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.ஆர்.எஸ்.எஸ்ஸின் தலையீட்டை தொடர்ந்து அத்வானி தனதுநிலைப்பாட்டை வேறுவழியின்றி தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். கோவாவில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பாஜகவின் செயற்குழுக்கூட்டத்தில் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். இந்தச் செயற்குழுக் கூட்டத்தை மூத்த தலைவர் அத்வானியும் அவரது ஆதரவாளர்களான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, உமா பாரதி உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.இதன் மூலம் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருப்பது பகிரங்கமானது.
அடுத்ததாக, கட்சியின் போக்கு கவலையளிப்பதாகக் கூறி அத்வானி தனது கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் திங்கள்கிழமை ராஜினாமா செய்தார். இது பாஜக வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவசரமாகக் கூடிய பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு, அத்வானியின் ராஜிநாமாவை நிராகரிப்பதாக அறிவித்தது. எனினும், தனது முடிவில் அத்வானி உறுதியாக இருந்தார். இந்நிலையில், ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுமாறு அத்வானியைவலியுறுத்துவதற்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்துக்கு முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங், சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு, கோபிநாத் முண்டே, ரவிசங்கர் பிரசாத், கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்ட தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சென்றனர். அவரை சமாதானப்படுத்த முயற்சித்தனர்.இந்த சமாதான முயற்சிகளுக்கு இடையில், ஜஸ்வந்த் சிங், அத்வானியை சந்தித்துவிட்டு அவருக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, அத்வானியை பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். அதன் பின் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மாஸ்வராஜ், உமா பாரதி ஆகியோர் அத்வானியின் இல்லத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சிறிய அறிக்கையை ராஜ்நாத் சிங் வாசித்தார். “ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் செவ்வாய்க்கிழமை மாலை அத்வானியுடன் பேசினார். அவர், ராஜிநாமா நிராகரிப்பு என்ற பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுவின் முடிவை மதிக்குமாறும், தேசிய நலன் கருதி கட்சியைத் தொடர்ந்து வழிநடத்துமாறும் அத்வானியைக் கேட்டுக் கொண்டார்.
பாகவத்தின் அறிவுரையை ஏற்பது என்று அத்வானி முடிவு செய்துள்ளார்’ என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் அத்வானி ஏன் கலந்து கொள்ளவில்லை? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, “”இது என்னுடைய செய்தியாளர் சந்திப்பு என்றும் இதில் நான் பேசுவதை நீங்கள் அமர்ந்து கேட்பது நன்றாக இருக்காது என்றும் நான்தான் அத்வானியிடம் கூறினேன். அதனால்தான் இதில் அவர் பங்கேற்கவில்லை. கட்சி செயல்படும் விதம் குறித்து அவர் எழுப்பிய அனைத்துக் கவலைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று அவருக்கு நான் உறுதியளித்துள்ளேன். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகள் குறித்து தலைவர், அத்வானியுடன் விவாதம் நடத்துவார்” என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.
அதேவேளையில், ராஜஸ்தான் மாநிலம் பால்மரில் செய்தியாளர்கள், கட்சிப் பொறுப்புகளில் இருந்து அத்வானி ராஜிநாமா செய்துள்ள சூழ்நிலையில், மோடி நியமனத்தில் தாங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது இம்முடிவில் மாற்றம் உண்டா? எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராஜ்நாத்சிங்கூறுகையில்,’”"இந்த முடிவை மாற்றப் போவதாக யார் கூறியது? எனது முடிவை நான் எங்கே மாற்றுவது? அதற்கான வாய்ப்பில்லை. அத்வானியைப் பொறுத்தவரை, அவர் எங்கள் வழிகாட்டியாக இருந்துள்ளார். இருக்கிறார். தொடர்ந்து இருப்பார்” என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.அதேவேளையில் அத்வானி தனது ராஜினாமா முடிவை கைவிட ஆர்.எஸ்.எஸ் தரப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரதமர் வேட்பாளர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகி புதிய தலைமுறைக்கு வழிவிடவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே அத்வானியிடம் வலியுருத்தியிருந்தது.
மோடியை தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நியமித்த முடிவில் மாற்றம் ஏற்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை என்று ஆர்.எஸ்.எஸ் திட்டவட்டமாக அத்வானியிடம் தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தலைவரின் உத்தரவுக்கு கீழ் படிந்தே அத்வானி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.அதேவேளையில் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவியில் மோடி நீடித்தாலும், பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தங்களைக்கலந்து ஆலோசித்தே முடிவு செய்வோம் என்று அத்வானிக்கு உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் கூட்டணிக் கட்சிகளும் அவரைஆதரிப்பது சுட்டிக் காட்டப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவர் ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் ராஜினாமா கடிதத்தை அத்வானி வாபஸ் பெற்றாரா? என்ற கேள்விக்கு ராஜ்நாத்சிங் தெளிவான பதிலை அளிக்கவில்லை. செய்தியாளர்கள் சந்திப்பில் அத்வானி பங்கேற்காததும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
.thoothuonline thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக