puduvalasai.net அப்பாக்குட்டி புதுவலசை அரபி ஒலியுல்லா உயர் நிலைப்பள்ளி புதுவலசை வாழ் நண்பர்களுக்காக.புகைப்படங்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் புதுவலசை புதுவலசை செய்திகள் இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் அப்பாக்குட்டி புதுவலசை அப்பாக்குட்டி மருத்துவம் புதுவலசை மலேசியா வாழ் புதுவலசை நண்பர்களுக்காக... அப்பாக்குட்டி மாவட்டங்களின் கதைகள் தாசின் அறக்கட்டளை Emirates Puduvalasai Muslim Association அப்பாக்குட்டி விந்தை உலகம் அப்பாக்குட்டி தகவல் கணினி அப்பாக்குட்டி அதிசய உயிரினம் அப்பாக்குட்டி கவிதைகள் அப்பாக்குட்டி தன்னம்பிக்கை இணைய தளங்கள் சிரியுங்கள்!!!!! சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:


அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥MYM.SAHABDUEEN PVS˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே<><>என் நன்றிகள் அப்பாக்குட்டி pvs .com .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<><>உங்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

செவ்வாய், 11 ஜூன், 2013

ஓடும் காரில் மகளை கொலை செய்ய முயன்ற தந்தை: ஜதாராபாத்தில் நடந்தேறிய விபரீதம்

[ செவ்வாய்க்கிழமை, 11 யூன் 2013, 10:39.38 AM GMT +05:30 ]
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகரறில் ஏழு வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம் அம்மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் துவம்சாபுரத்தின் அருகே நெடுஞ்சாலையின் ஓரம் 7 வயது சிறுமி ஒருவர் நேற்றிரவு படுகாயமடைந்து மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
இதனை அப்பகுதி வழியே சென்றவர்கள் மயக்கநிலையில் கிடந்த சிறுமியை 108க்கு தகவல் அளித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அச்சிறுமியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர்.
சிறுமி கூறுகையில், என் பெயர் அமோகா, நான் என் குடும்பத்தினருடன் ஜதராபாத்தில் உள்ள எனது உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றிருந்தேன். அத்திருமண விழாவில் என் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
அப்பிரச்சனையில் எனது தந்தை என்னுடைய தாயாரை அத்திருமணவிழாவில் விட்டுவிட்டு என்னை மட்டும் காரில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு சென்றார். வீட்டுக்கு செல்லும் வழியில் காரின் கதவை திறந்து என்னுடைய அப்பா ஒடும் காரில் இருந்து என்னை கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார் என அச்சிறுமி பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் அமோகாவின் தாயார் தனது மகளை காணவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் தனது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவலறிந்து அங்கு சென்று தனது மகளை பார்த்தார். இச்செயலை செய்துவிட்டு தலைமறைவாகிய அமோகாவின் தந்தையை பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

newindianews thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக